பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடூரமாக குத்திக்கொலை!

பங்களாதேஷின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளாா்.
தொலைக்காட்சி மற்றும் நாழிதழ் ஒன்றிலும் பணியாற்றி வந்த 32 வயதான சுபர்னா அக்டெர் நோடி என்ற பெண் ஊடகவியலாளரே பலியாகியுள்ளாா்.

கணவரிடமிருந்து விவாகரத்து மற் றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள சுபர்னா தனது 9 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்-ளார். இந் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று கூரிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளது.

சுபர்னாவின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடிவந்த அயலவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த சுபர்னாவை வைத்தியசாலையில் சேர்த்துள்ள- னா்.

வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி சுபர்னா உயிரிழந்துள்ளார். சுபர்னா மீது கொலை வெறித் தாக்குதல் நடாத்திய மர்ம கும்பலில் அவரது முன்னாள் கணவரும் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகித்துள்ளனா்.