முல்லைத்தீவில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை!

முல்லைத்தீவு இந்துபுரம் பகுதியில் பாடசாலை மாணவில் தூக்கில் தொங்கி உயிரிழப்பு!
முல்லைத்தீவு திருமுறுகண்டி இந்துபுரம் பகுதியில் பதின் அகவை பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று 31.08.18 அன்று இடம்பெற்றுள்ளது.
திருமுறுகண்டி சிவபாத கலையகம் பாடசாலையில் தரம் 09இல் கல்விகற்கும் 14 அகவையுடைய முருகேசு அபிசாளினி என்ற மாணவியே அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாங்குளம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு- வருகின்றார்கள் மாணவியின் உடலம்  கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.