கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் ஓடிப்போன தாய்.

image_pdfimage_print
வெறும் 2 மாத கள்ளக்காதலுக்காக 8 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய கணவனை அபிராமி உதறியுள்ளார். குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கணவருடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் சோகத்தில் இருந்த அபிராமிக்கு பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரமுக்கும் பேசிய வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தது.பின் மெல்ல மெல்ல அது கள்ள தொடர்பில் முடிந்தது.

அவரின் மீது உள்ள கள்ளகாதலால் காதலன் சுந்தரம் சொன்ன வார்த்தைக்காக இரு குழந்தைகளை விஷம் வைத்து துடிதுடிக்க கொன்றுவிட்டார். பின் வெளியில் பூட்டிவிட்டு காதலனுடன் உல்லாசமாக வாழ சென்றுவிட்டார்.
அன்று இரவு வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய விஜய்க்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடந்தனர்.