மனைவியை கொலை செய்ய முற்பட்ட நபரை கொலை செய்த கணவன்!

image_pdfimage_print

மனைவியை கொலை செய்ய முற்பட்ட நபரொருவரை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள கணவர் தொடர்பான செய்தி தெனியாய பகுதியில் பதிவாகியுள்ளது.
தெனியாய – அம்பகாஹேனே பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 43 வயதான நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் நேற்று மாலை குடிபோதையில் குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முற்பட்டுள்ளார்.
இதன்போது அந்த பெண் கூச்சலிட்டுள்ள நிலையில், அங்கு வந்த கணவர் கோடரியை கொண்டு அந்நபரை தாக்கியுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திலேயே அந்நபர் உயிரிழந்துள்ளார்.
கோடரியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்றைய தினம் மொரவக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்-படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெனியாய காவல்துறை மேற்கொண்டு வருகிறது.