முல்லைத்தீவில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி தற்கொலை!

ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பளம்பாசி கரடிப்புலவு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பம் 01.09.18 அன்று நடைபெற்றுள்ளது. வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட யோசம் சுரேஸ்கரன் என்ற 43 அகவையுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவரது உடலம் மாஞ்சோலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டு பொலீஸ் விசாரணைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.