தலைமுடி கொட்டியதால் இளம்பெண் ஒருவர் தற்கொலை!

image_pdfimage_print

தலைமுடி கொட்டியதால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் கல்லூரியில் நேகா (19) என்ற இளம்பெண் விடுதியில் தங்கி பிபிஏ படித்து வந்தார். இவர் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் நேகா சில தினங்களுக்கு முன்பு தனது முடியை அழகாக வெட்டுவதற்காக பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார்.

அங்கு நேகவின் முடிக்கு ஊழியர்கள் ஏதோ கெமிக்கலை தடவியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது முடி கொட்ட ஆரம்பித்தது.

இதை தடுப்பதற்கு பல வழிகளை முயற்சி செய்தும் முடி உதிர்வு குறையவில்லை.

இதனால் மனமுடைந்த குறித்த யுவதி கல்லூரிக்கு கூட செல்லாமல் இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் பயங்கர விரக்தி அடைந்து லட்சுமண தீர்த்த நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகளின் தற்கொலைக்கு காரணமான அழகு நிலைய ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.