மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல இளம் நடிகை.! அதிர்ச்சியில் திரையுலகம்.!!

ஹோட்டல் அறையில் பிரபல இளம் நடிகை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டலின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அந்த ஹோட்டலின் ஊழியர் ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

அந்த அறையை சோதனை செய்த ஹோட்டல் நிர்வாகத்தினர் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். அந்த அறையில் அம்மனிலத்தின் பிரபல இளம் நடிகையான  ‘பாயெல் சக்ரபோர்டி’ மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளம் நடிகையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அந்த இளம் நடிகை நேற்று மாலையே உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இளம் நடிகையின் மர்ம மரணம் குறித்து பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநில திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.