புளியங்குளத்தில் வீட்டிலிருந்து கணவன் , மனைவியின் சடலம் மீட்பு!

வவுனியா புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் வீட்டிலிருந்து கணவன் , மனைவி இருவர் இன்று (08.09.2018) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கணவன்,மனைவியான 25 வயதுடைய நந்தகுமார் மற்றும் 19 வயதுடைய கெளதமி என்ற  இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் . வவுனியா கனகராயன் குளத்தைச் சேர்ந்த இவ்விருவரும் பரிசங்குளத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.

மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும் கணவன் மனைவிக்கு அருகே சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் மரணம் தொடர்பாக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணைகளுக்காக சடலத்தினை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்குறிய நடவடிக்கைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.