இதனால் தான் என் மனைவியை துள்ள துடிக்க கொன்றேன் :கணவர் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்!

தமிழ்நாட்டின் பெரியகுளத்தில் மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன் என்பவர் தனது மனைவி தீபா மற்றும் மகள்கள் தேஜாஸ்ரீ (6), பிரதீபா(3) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், வேலைமுடிந்து நேற்று வீடு திரும்பிய மணிகண்டன், குடும்ப வேலை நிமித்தமாக கன்னிவாடி பகுதிக்கு செல்வதற்கு தன்னுடன் வரும்படி தீபாவை அழைக்க அவர் வர மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் தீபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

பின்பு காவல் நிலையத்தில் மணிகண்டன் சரண் அடைந்தார்.

அங்கு நடந்தவற்றை பொலிசாரிடம் வாக்குமூலமாக அளித்தார் மணிகண்டன்.

இதையடுத்து தீபாவின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.