நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு …
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் தலா 4 ரூபாவால் அதிகரிக்கப்படுள்ளது.
அதன்படி,
92 ஒக்டைன் பெற்றோல் 145 ரூபாவில் இருந்த 149 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் 157 ரூபாவில் இருந்து 161 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டீசலின் விலை 5 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, டீசலின் புதிய விலை 123ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 133 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.