சென்னை பெரும்பாக்கத்தில் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! இஞ்சினியர் கணவர் கைது!

சென்னை பெரும்பாக்கத்தில் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதை ஒட்டி அவர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் வேளச்சேரியை ஒட்டியுள்ள பள்ளிக்கரணை அருகே  பெரும்பாக்கம் அமைந்துள்ள்து.   இங்கு உள்ள கஜேந்திரன் நகர் முதல் தெருவில் வசிப்பவர் சுரேஷ் என்னும் இளைஞர்.    இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிபவர் ஆவார்.  இவருடைய மனைவி ரோகிணி ஒரு பி டெக் பட்டதாரி ஆவார்.   இவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர்கள்.   இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகி உள்ளது.

சுரேஷ் – ரோகிணி தம்பதியருக்கு இரண்டு வயதில் அஸ்விதா என்னும் மகள் உள்ளார்.    சுரேஷுக்கும் ரோகிணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.    சுரேஷ் வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.     இந்நிலையில் ரோகிணி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.  அச்சமடைந்த சுரேஷ் தலைமறைவானார்.

இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சுரேஷை தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.   அவரது குழந்தை ரோகிணியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.    திருமணம் ஆகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆனதாலும்,  வரதட்சணை கேட்டு சுரேஷ் தொந்தரவு செய்ததாக கூறப்படுவதாலும் ஆர் டி ஓ விசாரணை நடத்தி வருகிறார்.