மாஞ்சோலை மருத்துவமனையில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தம்!

image_pdfimage_print

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலங்களாக திட்டமிட்டு திகதி கொடுக்கப்பட்ட சத்திரசிகிச்சைகள் 05.09.2018 இலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பல மாத காலம் சத்திரசிகிச்சைகளுக்காக காத்திருந்த நோயாளிகள் பெரும் சிரமத்தையையும் விரக்தியையும் அடைந்து உள்ளார்கள். இதுபற்றி வைத்தியசாலை நிர்வாகத்திடம் வினவியபோது

சத்திர சிகிச்சையின் போது நோயாளர்களை மயக்க நிலையில் வைத்திருப்பதற்காக பாவிக்கப்படுகின்ற இயந்திரம் ஒன்று கடந்த ஒருமாதகாலத்திற்கு மேலாக பழுதடைந்த நிலையில் இன்னும் திருத்தப்படாமல் உள்ளது.

கையிருப்பில் உள்ள ஒரு இயந்திரத்தை மட்டும் பாவித்து கொண்டு அவசர சத்திர சிகிச்சைகளையும், திட்டமிட்ட சத்திரசிகிச்சைகளையும் சம நேரத்தில் செய்ய முடியாத காரணத்தால் மயக்கமருந்து கொடுக்கும் வைத்திய பிரிவு சத்திர சிகிச்சைகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந் நெருக்கடி நிலையை உடனடியாக அல்லது தற்காலிகமாகவேனும் தீர்ப்பதற்கு அயல் வைத்தியசாலைகளிலிருத்து கடன் அடிப்படையில் அவ்வியந்திரத்தை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மயக்க நிலைபேண வழிவகுக்கின்ற அவ்வாறான ஒரு இயந்திரம் புதிதாக பெட்டி உடைக்காத நிலையில் மல்லாவி ஆதார வைத்திய சாலையில் கடந்த ஒருவருடமாக இதுவரை பாவிக்காத நிலையில் இருப்பதை அறிந்து அதை கொண்டுவர மேலதிகாரிகள் முயன்றுள்ளனர்.

இருந்தும் அதை தருவதற்கு மல்லாவி வைத்திய சாலை நிர்வாகத்தால் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.