அடித்து நொறுக்கப்பட்ட நாற்காலிகள்… காயமடைந்த நடிகர் விஜய்: நடந்தது என்ன?

விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் பகுதி அருகே உள்ள சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்காக புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள், அவரை வரவேற்க, கட்அவுட், போஸ்டர்கள், என திரும்பிய பார்க்கும் இடமெல்லாம் விஜய் படங்கள் இருக்கும் அளவிற்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் மண்டபத்தை ஒட்டிய சாலைகளில் விஜயை பார்க்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதில் பலர் சிரமம் அடைந்தனர்.
திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவார் என்று கூறப்பட்டதால், ஏராளமான விஜய் ரசிகர்கள் கல்யாண மண்டபத்துக்கு படையெடுத்தனர்.

இதனால் திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மேடையை நோக்கி முன்னேறியதால் அவர்களுக்குளேயே அடிதடி ஏற்பட்டது. நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன், கூட்ட நெரிசல்களைத் தாண்டி மண்டபத்துக்கு வந்தார். இதையடுத்து மணமேடை வந்த விஜய், மணமக்களை வாழ்த்தி, பரிசு வழங்கினார்.

சரியான முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் ரசிகர்கள் திருமண விழா மேடையின் மேல் முண்டியடித்தனர். இதனால் விஜய்க்கு காலில் லேசான காயம் ஏற்பட்ட ரத்தம் வந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் கூட்டத்தை கலக்க மண்டபத்துக்கு வெளியே, விஜயை காண வேண்டும் என ஆசையில் கூடி இருந்த, ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பல அப்பாவி ரசிகர்கள் அடியை மட்டும் வாங்கிக்கொண்டு, விஜய்யை பார்க்காமலேயே திரும்பி சென்றனர். அதே போல் விஜய் காயமடைந்தார் என தகவல் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார், விஜய் மற்றும் அவருடைய மனைவியையை கூட்ட நெரிசலில் இருந்து விளக்கி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மணமேடை வந்த விஜய், மணமக்களை வாழ்த்தி பரிசு வழங்கினார். அப்போதும் பலர் நெருக்கியடித்ததால், விஜய்யும், சங்கீதாவும் செய்வது அறியாது திகைத்தனர்.

பவுன்ஸர்கள் எனப்படும் பாதுகாப்பு வீரர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

காலில் லேசான காயமடைந்த விஜய், மனைவி சங்கீதாவின் தோளில் கைபோட்டு பெரும் சிரமத்துக்கு இடையே மண்டபத்தில் இருந்து வெளியேறினார்

ரசிகர்களின் நெருக்குதல் காரணமாக மண்டபம் அலங்கோலமாக காட்சியளித்தது. சேர்கள் உடைக்கப்பட்டு, காலணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை காணமுடிந்தது.