விமானத்தில் பயணித்த பயணி காதலை தெரிவித்ததால் ஏற்பட்ட விபரீதம்! வீடியோ உள்ளே!

image_pdfimage_print
China Eastern Airlines-ல் பணிபுரியும் பணிபெண்-க்கு விமானத்தில் பயணித்த பயணி காதலை தெரிவித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணினை விமான நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது!
China Eastern Airlines-ல் பணிப்பெண்ணாக இருப்பவர் எக்ஸ்யோமி. கடந்த மே மாதம் இவர் விமானத்தில் பணிப்பெண்ணாக பயணித்த போது இவருடைய காதலரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்.
விமானம் பாதி வழி கடக்கையில் திடீரென அவரது நண்பர் எக்ஸ்யோமியிடம் தனது காதலை தெரிவித்தார்.
இந்த நிகழ்வினை விமானத்தில் பயணித்த ஒரு பெண்மனி படம்பிடித்து சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.
இந்த வீடியோவில் வரும் காட்சிகள் மற்றும் ஒலிகளின் மூலம் விமானத்தில் இருந்த அனைவரும் இத்தருனதினை ரசித்ததாக தெரிகிறது.
எனினும் விமானத்தில் ஓர் பணிப்பெண் இவ்வாறு நடந்துக்கொள்ளுதல் தவறு என தெரிவித்து அந்த விமான நிறுவனம் அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளாமல் பணிப்பெண் இவ்வாறு நடந்துக்கொள்ளுதல் தவறு என இந்த பணி நீக்கத்திற்கான விளக்கமாக இந்த விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.