சற்று முன் வவுனியாவில் புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்து : நால்வர் பலி! படங்கள் உள்ளே!

வவுனியா பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று (16.09.2018) காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த அதிவேக புகையிரத்தில் மோதுண்டே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தோர்  யாழ் நெடுந்தீவை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.