இலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர்..! பூங்காவில் சிக்கினார்..!

image_pdfimage_print


பேஸ்புக் ஊடாக பல இளம் பெண்களை ஏமாற்றிதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த பல் வைத்தியர் ஒருவரே, பேராதனை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் திருகோணமலை, தங்காலை உட்பட பல பிரதேசங்களிலுள்ள இளம் பெண்களுடன் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பு வைத்துள்ளார். காதல் தொடர்பு வைத்துள்ள பெண்களுடன் பண பரிமாற்றம் மற்றும் பரிசு பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த வைத்தியர் ஒரு பெண்ணை பேராதனை பூங்காவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில் வேறு இரண்டு பெண்களும் பூங்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த வைத்தியரும் வந்துள்ளார்.

குறித்த வைத்தியர் நேற்று காலை ஒரு பெண்ணுடன் நேரம் செலவிட்ட போதும் மேலும் இரண்டு பெண்கள் வந்தமையினால் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

கோபமடைந்த பெண்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.