கிளிநொச்சி கரடிபோக்கு வீதியில் கோர விபத்து! படங்கள் உள்ளே!

சற்றுமுன்னர் கிளி. கரடிபோக்கு வீதியில் (09-17-2018) இன்று மதியம் இடம்பெற்ற கோரவிபத்து.

திடீரென மாடு வீதியின் குறுக்கே சென்றதால் மினிபஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் கன்டர் ரக வாகனமும் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முறிகண்டிப் பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மினி பஸ்  ஒன்று பண்ணைப் பகுதியாக செல்லும் போது, திடீரென குறுக்கே வந்த மாடு ஒன்றுடன் மோதி, ஏதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கன்டர் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், மினி பஸ் சாரதியும் கவலைக்கிடமாக உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முல்லை நியூஸ் செய்திகளுக்காக Naveen Jeya