பட்டப்பகலில் மிருகம் போன்று மாறிய மனிதன்! பொதுமக்கள் அதிர்ச்சியில்!

ஈரோட்டில் பட்டப்பகலில் நபர் ஒருவர் மிருகம் போன்று சீறிப்பாய்ந்து சிறுவன் மற்றும் இளைஞரை கொடூரமாக கடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதியம் சுமார் 3.30 மணியளவில் தள்ளாடியபடி போதை ஆசாமி ஒருவர் சிறுவனை நோக்கி வந்திருக்கிறார். திடீரென சிறுவன் மீது பாய்ந்த அந்த ஆசாமி, சிறுவனை கீழே தள்ளிவிட்டு கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் கடித்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள், ஓடிவந்து அந்த போதை ஆசாமியை நையப் புடைத்து, அவனிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றியியுள்ளனர். சிறுவனின் உடலில் இருந்து ரத்தம் கொட்டியதைக் கண்டு கோபமடைந்த பொதுமக்கள், ஆத்திரம் தாங்காமல் அந்த ஆசாமியை விரட்டிப் பிடித்து அடித்துள்ளனர்.

இதனால் மயக்கம் அடைந்தது போல நடித்த அந்த நபர், திடீரென எழுந்து, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவரை கீழே தள்ளி கடிக்க ஆரம்பித்தார். இதனைப் பார்த்து சுற்றி நின்றிருந்த கூட்டம் தெரித்து ஓடியது.

ரகளை செய்த அந்த நபர், மதுபானத்தோடு வேறு சில போதை வஸ்துக்களையும் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.