வவுனியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ஆசிரியை கைது!

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் இன்று (2018.09.17) 1.30 மணியளவில் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது;

செட்டிகுளம் பகுதியில் பாடசாலையில் பணியாற்றும் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியர் ஒருவர் பாடசாலை முடிவுற்றதும் சகோதர மொழி பேசும் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் ஒருவரிடம் தொடர்ந்து பல நாட்களாக ஓரிணச்சேர்க்கையில் இருந்து வருவதாகவும் இதனை அப்பிரதேச மக்கள் நெடுநாட்களாக அவதானித்து உள்ளனர்.

இன்றைய தினமும் குறித்த ஆசிரியையும் மற்றைய பெண்ணும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பொழுது குறித்த இருவரையும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து குறித்த இருவர் மீதும் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டதுடன் குறித்த இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.

இதேவேளை

இரு பெண்களின் தொடர்பு கடந்த 6மாதங்களுக்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுடன் வவுனியா நகரில் வசித்து வரும் குறித்த ஆசிரியை ஏற்கனவே தான் பணி புரிந்த பாடசாலை ஒன்றில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதனால் அவர் மாற்றமடைந்தது தற்சமயம் செட்டிகுளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது