முல்லைத்தீவு தெற்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி!

image_pdfimage_print

முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி!

முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியில் வசித்துவரும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 17.09.18 அன்று தற்கொலைக்கு முயன்று மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கள்ளப்பாடு தெற்கு தீர்த்தக்கரைப்பகுதியில் வசித்துவரும் 38 அகவையுடைய பால்பாண்டியன் சங்கர் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவரை காப்பாற்றிய அயலவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடற்தொழிலை நம்பி வாழும் இந்த குடும்பம் அதிகப்படியான கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவதாகவும் கடற்தொழில் ஊடாக சரியான வருமானம் இல்லாத காரணத்தால் ஏற்பட்ட குடும்பச்சண்டை காரணமாகவே தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இவரது மனைவி தெரிவித்துள்ளார்.