மருத்துவமனைக்குச் சென்ற மாணவியின் கையில் சிசு- அதிர்ச்சியில் பெற்றோர்!!

image_pdfimage_print

சுகயீனம் காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற சிறுமி அங்கு சில மணி நேரங்களில் சிசு ஒன்றைப் பிரசவித்தார்.

இந்தச் சம்பவம் பதுளையில் நடந்துள்ளது.

பதுளை நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி, சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள பதுளை பொது வைத்தியசாலைக்கு தனது தாயுடன் சென்றுள்ளார்.

இதன் போது குறித்த மாணவி கர்ப்பமுற்றுள்ளார் எனவும் அவர் குழந்தையை பெற்றெடுக்கும் காலம் அண்மித்து விட்டதாகவும், தெரிவித்த வைத்தியர்கள், மாணவியை மகப்பேற்று பிரிவில் அனுமதித்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் மாணவி குழந்தையை பிரசவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் உறவினர்களில் ஒருவரான 21 வயதுடைய இளைஞரே , சிறுமியை துர்நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.