பதுளை பதுளுப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் இருந்து, 17 பாம்புக் குட்டிகளை, வீட்டின் உரிமையாளர், இன்று (21) காலை மீட்டுள்ளார்.
பாம்புகளைப் பிடிப்பதில் பரீட்சயமான ஒருவரை வரவழைத்துள்ள வீட்டுரிமையாளர், அவரது உதவியுடன், பாம்புக்குட்டிகளைப் பிடித்து போத்தலொன்றில் அடைத்துள்ளதுடன், அவற்றை அருகிலுள்ள வனத்தில் விடுவித்துள்ளார்.
இது தொடர்பில் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.