கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்!

image_pdfimage_print

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி வீரர்கள் தப்பிச் செல்ல முயற்சித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

2018ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண சுற்றுத்தொடரில் முதல் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறியுள்ளது. இதனையடுத்து இரவோடு இரவாக அணியின் வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அணியின் வீரர்கள் நேற்றிரவு இலங்கை வந்தடைந்துள்ளனர். இரவோடு இரவாக வந்த வீரர்கள் யாரிடமும் கருத்து வெளியிடாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் ஊடகவியலாளர்களை தவிர்த்து விட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேற தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சுரங்க லக்மால் ஊடகவியலாளர்களிடம் சிக்கியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சுரங்க லக்மால், எல்லா நேரங்களிலும் வெற்றி பெற முடியாது. வெற்றி பெறுவது போன்று தோல்வியும் வருவது சகஜம். பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பில் காணப்பட்ட பலவீனம் காரணமாக தோல்வி ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண சுற்றுத்தொடரின் முதல் சுற்றில் கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளிடம் இலங்கை அணி படுதோல்வி அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.