விபத்தில் ஊற்றங்கரை சித்தி விநாயகர்ஆலய குருக்கள் அகால மரணம்¦

தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தின் போது ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்தின் முதன்மை குருவான சிவசிறி பத்மகுமார குருக்கள் உயிரிழந்துள்ளார்.
21.09.18 அன்று இரவு 10.00 மணியளவில் நெடுங்கேணியில் இருந்து தண்ணீரூற்று நோக்கி உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த குருக்கள் மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் அவசர ஊர்தி மூலம் மாஞ்சோலை மாவட்ட மருத்துவ மனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு உயிரிழந்துள்ளார்.
தண்ணீரூற்று ஊற்றங்கரை சித்தி வினாயகர் ஆலயத்தின் முதன்மை குருவாக விளங்கிய இவர் பல்வேறு சிவ தொண்டுகளை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.