இன்றைய ராசி பலன் இதோ: 22.09.18

image_pdfimage_print


மேஷம்

வெளியூர் பயணங்களினால் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். கால்நடைகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணிபுரிகின்ற இடங்களில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். மற்றவர்களிடம் கொஞ்சம் அனுசரணையுடன் நடந்து கொள்ளுங்கள். வீட்டுக்குத் தேவையான புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களுடய ஆதரவினால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு சுப செய்திகள் உண்டாகும். தானியங்களின் மூலமாக லாபங்கள் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கினில் முன்னேற்றங்கள் உண்டாகும். சின்ன சின்ன மனக்கவலையினால் வேலையில் எந்தவித கவனமும் இல்லாமல் வசைச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்

தொழில் கூட்டாளிகளின் உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்ய முயற்சி செய்வீர்கள். மனதுக்குள் உள்ள கவலைகள் நீங்கும். மற்றவர்குளிடம் நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமான முடிவைத் தரும். போட்டிகளில் உங்களுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கடகம்
புதிதாக வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடி வரும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களின் புத்திக்கூர்மை உங்களுக்கு வெளிப்படும். அரசாங்கத் தரப்பிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். புதுவிதமான தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம்அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்

வீட்டில் குடும்பத்தில் புதிய உறுப்பினர்களுடைய வருகை உண்டாகும். சமூக சேவை புரிகின்றவர்களுக்கு சாதகமற்ற சூழல்கள் தான் உருவாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் கல்வி பயில்கின்றவர்களுடைய திறமைகளுக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி

மன தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பணிகளில் உங்களுக்கான பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் அதிகரிக்கும். உயர்கல்வி அதிகாரிகளின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய அறச் செயல்களினால் நல்ல பெயர் உண்டாகும். உங்களுக்கு சுப செய்திகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்

பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். வெளிநாட்டுப் பணி விவகாரங்களில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கண்களில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியங்கள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய உடன் பிறப்புகளால் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

உங்களுடைய செயல்பாடுகளினால் இருந்து வந்த இடையூறுகள் தீர்ந்து போகும். மனம் புத்துணர்ச்சி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வெளியூா் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்து வந்த இழுபறி நிலைகள் குறைந்து, உங்களுக்கு சுமூகமான சூழல்கள் உருவாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு

வாகனங்களால் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். விவாதங்களின் மூலம் நீங்கள் எண்ணிய முடிவுகள் கிடைக்கச் செய்யும். உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம், வெற்றி கிடைக்கும். வாக்குறுதிகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்

வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் நிறைத்த எண்ணிய எண்ணங்களினால் காரிய வெற்றிகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் உங்களுடைய சக ஊழியர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவினால் மகிழ்ச்சி ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கும்பம்

தொழில் சம்பந்தமான எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் உண்டாகும். தாய்மாமன் உறவு மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் அதிகரிக்கும். அது நீங்கள் எதிர்பார்த்த பலனை உங்களுக்குத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கும்.

மீனம்

நண்பர்களுடைய உதவியினால் தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும். புத்திரர்களால் உங்களுக்கு சுப செய்திகள் உண்டாகும். மூத்த சகோதரர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வாதத் திறமையினால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். அந்நியர்களால் பொருளாதார விருத்தி உண்டாகும். பெரியோர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.