இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்..இல்லையேல் ஆபத்தில் முடிந்து விடும்…!

image_pdfimage_print

மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.

அதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரவகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். அவர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள்.

வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்

மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடி வரும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். உறவினர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பொறுப்புகளை நீங்களே நிறைவேற்றிக்கொள்வது நல்லது.

வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

கடகம்

இன்று அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். வெளியில் செல்லும்போது உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

சிம்மம்

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வீட்டில் பராமரிப்புப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கன்னி

எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாம்

வீண் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்து விடுவது நல்லது. வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

வியாபாரத்தில் லாபம் கிடைப்பதுடன், பணியாளர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

விருச்சிகம்

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு மகான்களின் தரிசனமும், அவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.

வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகரம்

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கும்பம்

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

மீனம்

உற்சாகமான நாளாக அமையும். ஆனால், புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். நீண்டநாள் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.