இலங்கை நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு 23 வயது இளைஞனுக்கு மரண தண்டனை!

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9.41 கிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் குறித்த இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்கும் தினத்தன்று உயிர் பிரியும் வரை தூக்கிலிட உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 23 வயதான ரங்க சுமித் பண்டார என்ற இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த இளைஞன் கடந்த 2012ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இந்த குற்றத்தினை மேற்கொண்டுள்ளதாக சட்ட மா அதிபர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.