குடும்ப பிரச்சினை காரணமாக இரு பிள்ளைகளின் தாயொருவர் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளதாக அம்பலந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க முடியாது என கணவனுக்கு கடிதம் எழுதிவிட்டு கங்கையில் குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அம்பலந்தோட்டை வலவே கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொ
ண்ட பெண்ணை, பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான கன்கானம் அனுருந்திக்கா என்ற 2 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை கங்கையின் பாலத்தின் மீது தனது பையை வைத்துவிட்டு, கங்கையில் குதித்துள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது பையை பரிசோதிக்கும் போது அவரால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கடிதத்தில் “செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க முடியாது. நான் என்ன கூறினாலும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கூறினீர்கள். என்னால் அதனை தாங்கி கொள்ள முடியவில்லை. அதனாலேயே தற்கொலை செய்து கொள்கின்றேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன பெண்ணின் சடலத்தை கடற்படையினர் உட்பட குழுவினர் தொடர்ந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் எந்தவொரு தகவலும் கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.