போதைப் பாவனை, அடிதடி – திருநெல்வேலியில் மூவர் கைது!

திருநெல்வேலி சிவன் , அம்மன் இரு ஆலயங்களின் அருகில் அடி, தடியில் நேற்று இரவு 7.30 மணியளவில்  ஈடுபட்ட இரு குழுவினரை பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.

இரு குழுவினர் தடிகள் , பொல்லுகள் சகிதம் அதிக போதையில் உள்ள சில இளைஞர்கள் மோதிக்கொள்வதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல். ஒன்றினடுத்து பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

இவ்வாறு பொலிசார் சுற்றி வளைத்த சமயம் பலர் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய போதும் மூவரை பொலிசார் மடக்கிப் பிடித்தனர் மேலும் பலர் மோட்டார் சைக்கிள்களையும் எறிந்துவிட்டுத் தப்பியோடினர். இவ்வாறு தப்பியோடியவர்களை பொலிசார் விரட்டிச் சென்றபோதும் இரவு நேரம் என்பதனால் பலர் தப்பிச் சென்றனர்.

இதன்போது கைவிடப்பட்ட நிலையில் பல திக்குகளிலும் இருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பொலிசார் மீட்டெடுத்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

இப் பகுதியில் உள்ள ஆலயங்கள் மற்றும் சன சமூக நிலையம் ஆகியவற்றின் அருகே இரவுவேளைகளில் மட்டுமன்றி பகல்வேளைகளிலும் பல இளைஞர்கள் ஒன்றுகூடி மது மற்றும் கஞ்சாப் பாவனையில் ஈடுபடுவமாக இப் பகுதி மக்கள் பொலிசாருக்கு நீண்டகாலமாக தகவல் வழங்கிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.