இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் 10 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது..
சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பலரது உடல்கள் கடற்கரையில் ஒதுங்கியிருப்பதை அடுத்து பலி எண்ணிக்கை கிட்டத்தட்ட 400 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய பேரிடர் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
காயமடைந்து மருத்துவமனைகளுக்கு வரும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. மீட்புப் பணிகளும் துரித கதியில் நடந்து வருகின்றமை குறிப்பிடதக்கது.