முல்லைத்தீவு மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழில் தகமை சான்றிதழ் (NVQ) வழங்கும் நிகழ்வு இன்று 02.10.2018 ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் மற்றும் மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர்கள் பங்குபற்றினர்.
கணனி வன்பொருள் திருத்துனர், தையல், மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருத்துனர், தகவல் தொடர்பாடல் தொழிற்நுட்பவியலாளர் ஆகிய பயிற்சி நெறியினை பயின்ற பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வினை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
முல்லை நியூஸ் செய்திகளுக்காக KEERSRIDHEVA
படங்கள் – SAMYUTHAN