முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த 1ஆம் வட்டாரம் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அத்தோடு சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வு 06.10.2018 இன்று 5ஆம் ஆண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடும் இலுப்பையடி இளைஞர் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.
இதன்போது புலமைப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களது பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதி ஒரு கசப்பான காலமாக இருக்கின்ற போதிலும் முல்லைத்தீவு மக்களின் திடமான மனநிலை, கல்வி மற்றும் விடாமுயற்சி என்பன சர்வதேச சமூகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், முன்மாதிரியாகவும் திகழ்வது வெகுவாக பாராட்ட கூடிய விடயமாகும்.
அத்தோடு முல்லைத்தீவு இலுப்பையடி இளைஞர்களின் இப்படியான சமூகப்பணி, கௌரவிப்பு நிகழ்வு ஏனைய மாவட்டங்களுக்கும், ஏனைய சங்கங்கள், இளைஞர் சமூகத்திற்க்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.