முல்லைத்தீவினை சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

முல்லைத்தீவு பொக்கணை பிரதேசத்தினை சேர்ந்த 23 அகவையுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என்ற கல்வியற் கல்லூரி மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஆரையம் பதியில் உள்ள  கல்வியற் கல்லூரியில் முதலாம் வருட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவன் கல்லூரியில் இணையும் பொது ஏழு பேர் கொண்ட மாணவ குழுவினால் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நிலையில் கல்லூரி செல்லமாட்டேன் என்று சொல்லி வீடு வந்து நின்ற மாணவனை மீண்டும் பெற்றோர் கல்லூரிக்கு கொண்டு சென்று விட்டுள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த மாணவன் 08.10.18 அன்று விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த கொலையில் பெற்றோர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பெற்றோர் உடலத்தினை மீட்டு முல்லைத்தீவிற்கு கொண்டுவருவதற்காக மட்டக்களப்பு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த உடலம் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.