இலங்கையில் நடந்த பயங்கரம்-மாணவியை நிர்வாணப் புகைப்படம் எடுத்து -தாயை துஷ்பிரயோகம்!

image_pdfimage_print

முகப்புத்தகத்தின் மூலமாக நட்பை ஏற்படுத்தி 16வயது பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண புகைப்படத்தை பெற்றுக்கொண்டு அதை தனது நண்பர்களிடம் கொடுத்து மாணவியின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்து அதனையும் வீடியோ படமெடுத்து வீட்டில் இருந்த தங்கநகைகளை கொள்ளையடித்த இருவரை நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கடந்த 5ம் திகதி இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து இரண்டு தங்கச்சங்கிலிகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கொறனை நந்த மாவத்தையை சேர்ந்த 21வயது இளைஞர் ஒருவரும்,கொறனை முனிதாச மாவத்தையை சேர்ந்த திருமணமான நபரொருவருமாகும்.

பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளதாவது குறித்த இளைஞரும் 16 வயது மாணவியும் முகப்புத்தகத்தில் நட்பாகி காதலித்து வந்துள்ளதகாவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் முகப்புத்தக மெசேஞ்சர் மூலமாக குறித்த மாணவியின் நிர்வாண செல்பி புகைப்படம் ஒன்றை பெற்றுள்ளார். பின்னர் மாணவியிடம் தனக்கு தேவையான பணத்தை தருமாறும் அப்படி தர மறுத்தால் மாணவியின் நிர்வாணா புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதாகவும் மிரட்டியுள்ளார். தன்னிடம் பணம் இல்லையென்றும் தனது தாயாரின் அலுமாரியில் தங்கநகைகள் இருப்பதாகவும் மாணவி இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது நண்பர்கள் இருவரை வீட்டிற்கு அனுப்புவதாகவும் அவர்களிடம் அலுமாரியில் தங்க நகை இருக்குமிடத்தை காட்டவேண்டுமென்றும் மாணவியை இளைஞர் மிரட்டியுள்ளார். இதற்கமைய குறித்த இளைஞர் அனுப்புவதாக தெரிவித்த நண்பர்கள் இருவர் கடந்த மாதம் 12ம் திகதி காலை 10 மணியளவில் மோட்டார்சைகளில் மாணவியின் வீட்டிக்கு வந்து கத்தியொன்றை காண்பித்து மாணவியை அறையொன்றில் வைத்து பூட்டியுள்ளனர். அதன் பின்னர் சந்தேகநபர்கள் மாணவியின் தாயாரின் கைகளை கட்டி பாலியல்துஸ்பிரயோகம் செய்து அதனையும் தமது கையடக்க தொலைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியின் தாயாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததன் பின்னர் அலுமாரியில் இருந்த இரண்டு தங்க சங்கிலிகள்,இரண்டு தங்க பென்டன்கள்,ஒருசோடி தோடு ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சந்தேகநபர்கள் மிக கடுமையான போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள் முடிவடைந்ததும் சந்தக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர் இச் சம்பவத்தை திறன்பட விசாரணைசெய்த பொலிஸார் விபரம் நீர்கொழும்பு வலய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சந்தன அத்துகோரல அவர்களின் ஆலோசனைக்கு அமைய பிரதி பொலிஸ் உயரதிகாரி Y.G.R.M.ரிப்பாட் மற்றும் நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி சம்பத் திசாநாயக்க அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் அதிகாரிகளான M.L.M .ரௌப்(63188),ஹேரத்( 34064),சதுரங்க ( 31877 ),வன்னிநாயக ( 37928),கயான் (82756),பிரபாத் ( 78142 ),ஹபுவிட( 88441 ),ஜயக்கொடி( 85438 ) ஆகியோர் ஆவர்.