திருமணமான மகனுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்

சிலாபம் – வென்னப்புவ, கடவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்த கடற்கரை வீதியை சேர்ந்த 30 வயதான நுவன் சத்துரங்க என்ற திருமணமான நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

தந்தைக்கும், மகனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் மகன், தந்தையை தாக்கியுள்ளார். இதனையடுத்து தந்தை கத்தியை எடுத்து மகனை குத்தியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மகன், மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர். நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன. வென்னப்புவ பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்