முல்லைத்தீவு மாவட்டத்தை பெருமைப்படுத்த மக்களின் வாக்குகளை ஏதிர்பார்த்து நிற்கும் மாணவர்கள்!

வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களின் திறமைக்கான ஒரு களம். முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த அன்ரன் ஜெகன் மற்றும் ஜெனார்த்தனன் ஆகிய இருமாணவர்களும் “Anchor Students with Talent” நிகழ்ச்சியில் பரத நாட்டிய நிகழ்ச்சி பிரிவில் இன்று இறுதி போட்டியில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

“Anchor Students with Talent ”   இறுதி பிரம்மாண்ட போட்டி இன்று 13ஆம் திகதி (சனிக்கிழமை ) மாலை 3.00 மணி முதல் 8.00 மணி வரை யாழ். நகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அத்துடன் மக்களுக்கு நேரில் வருகைதந்து வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் 0777014567 என்னும் தொலைபேசி இலக்கத்துக்கு இலவசமாக (Missed Call) அழைப்பினை ஏற்படுத்தியும் தங்கள் வாக்குகளினை அளிக்கமுடியுமென போட்டி ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.