யாழ்ப்பாணத்தில் உயிர் வாழ பயந்து ஐரோப்பாவுக்குள் தஞ்சமடையும் பெருமளவு தமிழர்கள்

யாழ்ப்பாணத்தில் உயிர் வாழ முடியாத நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு பெருமளவு தமிழர்கள் தற்போது சென்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழுவினருக்கு பயந்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 1371 பேர் சுவிட்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளனர்.

அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்பதை உறுதி செய்து அரசியல்வாதி ஒருவர் கடிதம் வழங்குவதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆவா குழுவுக்கு பயந்து சுவிஸ் வந்ததாக பெருமளவு தமிழர்கள் தெரிவித்துள்ளனர் என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எனினும் இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படவில்லை என ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சூரிச் நகரிலுள்ள உணவகம் ஒன்றில் தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் மூலம் இந்த தகவல்கள் கசிந்துள்ளதாக புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.