அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராஜா ராணி செண்பா !! அவரே வெளியிட்ட புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

image_pdfimage_print

இன்றைய சினிமாவில் பெரியத்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் சஞ்சீவ். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவருக்கு மனைவியாக நடிக்கும் மானசாவிற்கும் அதே அளவிற்கு வரவேற்பு உண்டு.

தமிழ் சினிமாவில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ராஜா ராணி மட்டும் தான் என்பது நாம் அறிந்த ஓன்று தான். இந்த சீரியலில் செம்பாவாக நடிக்கும் நாயகி ஆல்யா மானசாவுக்கு எப்படிபட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் என்பது அவரது சமூக வலைதளத்தை பார்த்தாலே தெரியும். இவர் நடிப்பை தாண்டி நடனம், டப்ஸ்மேஷ் போன்ற வகையில் மூலம் மிகவும் பிரபலம்.

ராஜா ராணி சீரியலில் செண்பா ரோலில் நடித்து வருபவர் ஆலியா மானஸா. இந்த சீரியலால் தான் அவர் அதிக பிரபலமானார் என்று கூட சொல்லலாம்.அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் சஞ்சீவ்வுடன் இணைத்து சில கிசுகிசுக்களும் அடிக்கடி வலம் வருகிறது.

இந்நிலையில் தற்போது ஆலியா மானஸா தற்போது முடியின் அளவை குறைத்து புது கெட்டப்புக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அது 5 மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.