கொலைக்களமாக மாறும் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி; நேற்றிரவும் நடந்த பயங்கர சம்பவங்கள் !

பிரித்தானியாவில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் நேற்றிரவு இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொரு இளைஞன் காயம் அடைந்துள்ளார்.

சம்பத்தில் 23 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இதுவரையில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் இடம்பெற முன்னர் குறித்த பகுதியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பத்திலும் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பிரித்தானியாவில் அண்மைக்காலமாக அதிகளவான குற்றச் செயல்கள் மற்றும் கத்திக் குத்து தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 100 பேருக்கு அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது மிகப்பெரிய அதிகரிப்பு என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட 100 பேருக்குள் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.