யாழில் அதிகாலையில் 4 பேர் கொண்ட கும்பலால் வீடொன்றில் நடந்த அட்டூழியம்!

யாழ்ப்­பா­ணம் – ஏழா­லை பகுதியில் கத்தி, கொட்­டன்­க­ளு­டன் வீடுகளுக்குள் புகுந்த கும்­பல் அட்­டூ­ழி­யத்­தில் ஈடுபட்டதுடன், வீடு­க­ளில் இருந்த பொருட்கள், வேலி­கள், மின்கு­மிழ்களை தாக்­கி சேதப்­ப­டுத்திச் சென்றுள்ளனர்.

இந்­த சம்­பம் நேற்று அதி­காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதி­கா­லை­ வேளையில் வீட்டு வள­வுக்­குள் நுழைந்த 4 பேர், முற்­றத்­தில் இருந்த மின்கு­மிழை முத­லில் உடைத்துத்துள்­ள­னர்.

பின்­னர் நீர்த்­தாங்கி, கதி­ரை­கள், உள்­ளிட்ட தள­பா­டங்­க­ளை சேத­மாக்­கிய நிலையில், வீட்­டின் உரி­மை­யா­ளர் குரல் எழுப்ப அவர்­கள் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்ளனர்.

அதன்­பின் அந்­தப் பகு­தி­யில் உள்ள 4 வீடு­க­ளுக்­குள் அந்­த கும்­பல் நுழைந்து அட்டகாசத்­தில் ஈடு­பட்­டது என்று தெரிவிக்­கப்­பட்­டது.

வீட்டு வேலி­க­ளைச் சேத­மாக்­கி­ய­து­டன், வீட்டு வள­வில் இருந்த பொருட்­க­ளைச் சேதமாக்­கி­னர் என்­றும் குறிப்பிடப்படுகின்றது.

இந்­த சம்­ப­வம் தொடர்­பாக 119 அவ­ச­ர பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டும் பொலிஸார் சம்­பவ இடத்­துக்கு வரவில்லை என்று மக்­கள் விச­னம் தெரி­வித்­த­னர்.

முற்­ப­கல் 10 மணி­ய­ள­வி­லேயே சுன்­னா­கம் பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்கு வந்து விசா­ரணைகளை நடத்­தி­னர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.