கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் 31 இவரது மனைவி உஷா 25 இவர்களின் மகள் பிரதிஷா 3 மூன்று இவர்கள் அனைவரும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
கடந்த இரண்டு நாட்கள் முன்பு சொந்த ஊரான எடைச்செருவாய் கிராமத்திற்கு வந்துள்ளனர். நேற்று இரவு வழக்கம் போல் தூங்குவதற்கு தனது அறைக்குச் சென்று பிரகாஷ் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் கதவு திறக்காததால் உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்கப்படாத நிலையில் ஜன்னல் பார்த்தபோது உஷா தூக்கில் தொங்கியநிலையில் காணப்பட்டார்.
உடனடியாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் பிரகாஷ் அவரது மகள் பிரதிஷா இருவரும் கை அறுத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதன் காரணம் என்னவென்று தெரியாத நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.