சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் பொதுவாக கற்கள் உண்டாவதற்கு காரணமாக இருப்பவை, சரியான ஊட்டாச்சத்து இன்மை மற்றும் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகியிருக்கின்றன என்பதை கீழ் வயிறு மற்றும் பக்கவாட்டில் ஏற்படும் வலியை வைத்து கண்டறியலாம்.
குமட்டல், விலா எலும்பு பகுதியில் வலி, வாயில் புளித்த ருசி உணர்தல் போன்றவை பித்தப்பை கற்கள் உண்டானதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் பித்தப்பை கற்கள் உண்டாகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேவையான பொருட்கள் சர்க்கரை – 250 கிராம், விர்ஜின் ஆலிவ் எண்ணெய் – கால் லிட்டர்,எலுமிட்சை தோல் – 250 கிராம், பார்ஸ்லே வேர் (துண்டு துண்டாக வெட்டப்பட்ட) – 250 கிராம், தேன் – 250 கிராம் வழிமுறை நன்கு கழுவிய எலுமிச்சை பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பார்ஸ்லே வேர்களை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, எலுமிச்சையை அரைத்து போலவே, இதையும் நன்கு அரைக்கவும்
பிறகு, அரைத்த எலுமிச்சை மற்றும் பார்ஸ்லேவுடன் தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்குங்கள். இந்த அனைத்து பொருட்களும் சமப்பங்கு அளவு இருக்க வேண்டியது அவசியம்.
உட்கொள்ளும் முறை
இந்த கலவையை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவும், உறங்குவதற்கு முன்னர் ஒரு டேபிள்ஸ்பூன் அளவும் உட்கொள்ளுங்கள்.
இந்த கலவையை கண்ணாடி பாட்டிலில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஏனெனில், இது அழுகிப் போக கூடிய தன்மை கொண்டது.
இதை முடிந்தால் 4-5 நாட்களுக்கு ஒருமுறை செய்து உட்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த கலவை குறுகிய காலத்தில் கெட்டுவிடும். இந்த இயற்கை மருந்து சிறுநீரக கற்களையும், பித்தப்பை கற்களையும் திறம்பட கரைக்கும் தன்மை கொண்டது.