நள்ளிரவு பார்டியில் குடித்து விட்டு போலிசை தாக்கிய 4 இளம் பெண்கள் , இணையத்தில் பரவும் வீடியோ!

நள்ளிரவில் பார்டியில் குடித்து விட்டு ரோட்டில் ரகளை செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை சமாதானப்படுத்த வந்த போலிஸ் அதிகாரிகளை குடி போதையில் தாக்கிய இளம் பெண்களை மும்பை போலிசார் கைது செய்து 14 நாள் சிறையில் ரிமாண்ட் செய்துள்ளனர்.

மும்பை மிரா ரோட் பகுதியில் நடைபெற்ற பார்டி ஒன்றில் நன்கு குடித்து விட்டு 4 இளம் பெண்கள் பயந்தர் பகுதியில் உள்ள மக்சஸ் மால் அருகே சுமார் நள்ளிரவு 2 மணி அளவில் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்து 4 இளம் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுள்ளனர்.

இதை பார்த்த அந்த வழியாக வந்த பேட்ரோல் போலிஸார் வாகனத்தை நிறுத்தி அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இதில் குடிபோதையில் இருந்து நான்கு பெண்களில் ஒருவர் பெண் போலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார். ஆண் போலிஸ் அதிகாரியையும் போதையில் தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதனால் அங்கு கூட்டம் கூடியது.

நான்கு பெண்களும் சேர்ந்து போலிசாரின் லட்டியை பிடித்து தாக்க முயன்றதோடு அங்கு கூடியிருந்தவர்களையும் மிரட்டினர்.

பொதுமக்கள் கூடியதை தொடர்ந்து அனைவரும் இந்த சம்பவத்தை தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். இப்படியே போனா சரிவராது என நினைத்து போலிஸ் அதிகாரிகள் லட்டியை எடுத்து சுழட்டி போதையில் இருந்த இளம் பெண்களை நாளு சாத்து சாத்தி வண்டியில் ஏற்றினர்.

இதை பார்த்த போதுமக்கள் போலிசாரை பாராட்டும் வண்ணம் கைது தட்டினர். போலிசார் லட்டியை எடுத்ததும் நான்கு பேரில் ஒரு பெண் தப்பி ஓடினார்.

மம்தா , அலிசா , சிரிவஸ்தவா ஆகிய மூன்று இளம் பெண்களை போலிசார் 353, 332,504 ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தினர். போதையில் ரகளை செய்த இளம் பெண்களை நீதிபதி 14 நாள் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தப்பி ஓடிய கொஸ்டா என்ற பெண்ணை போலிசார் தேடி வருகின்றர். இந்த சம்பவத்தை செல்போனில் பலர் பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றனர்.