முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு தப்பிச்சென்ற வாகனச் சாரதி!

முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு தப்பிச்சென்ற வாகனச் சாரதி. வவுனியா கற்பகபுரம் பகுதியில் வீட்டிற்கு முன்பாக தரித்துநின்ற முச்சக்கரவண்டியை அவ்வீதி வழியாக சென்ற பட்டா ரகவாகனம் மோதியதில் முச்சக்கரவண்டியில் இருந்த நான்குபேர் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் குருமன்காடு பகுதியில் உள்ள திலகன் பந்தல்சேவைக்கு சொந்தமான பட்டாரக வாகனம் கற்பகபுரம் பகுதியில் வீட்டிற்கு முன்பாக பயணம் செய்வதற்கு தயாராக தரித்து நின்றிருந்த முச்சக்கரவண்டியை மோதியதுடன் தப்பிச்சென்றுள்ளது. எனினும் தப்பிச்சென்ற வாகனம் பள்ளத்தில் புதையுண்டதால் சாரதி தப்பி ஓடியுள்ளார்.

aaddoo முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு தப்பிச்சென்ற வாகனச் சாரதி aaddooஇவ் விபத்தில் முற்சக்கரவண்டியில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் மற்றும் பெண்ணொருவர் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விபத்தை ஏற்படுத்திய பட்டாரக வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த சாரதி மது போதையில் இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.