பறக்க தயாரான விமானம்; பணிப்பெண்னுக்கு திடீரென நேர்ந்த பரிதாபம்!

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஏர் இந்தியா பயணிகள் விமானம் டெல்லிக்கு புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்து சரிபார்க்கப்பட்டதை தொடர்ந்து, விமானத்தின் கதவு மூடப்பட்டது. அப்போது கதவின் அருகே நின்றுகொண்டிருந்த பணிப்பெண் திடீரென தவறி வெளியே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.