பாடசாலை சென்ற சிறுமி பரிதாப மரணம்!

கனடாவின் கல்கரி ரயில் கடவையை கடக்க முற்பட்ட 6 வயதான சிறுமியொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) காலை பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த மாணவி, ரயில் கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் ரயில் வருவதற்கான மணி ஒலிக்கப்பட்டதோடு, வெளிச்ச விளக்குகளும் ஒளிரவிடப்பட்டுள்ளன.

இதன்போது பீதியடைந்த மாணவி, கடவையை கடப்பதில் குழப்பமடைந்துள்ளார்.

மாணவியை காப்பாற்ற ரயில் சாரதி சமிக்ஞை ஒலியை பலமாக எழுப்பியுள்ளார். எனினும், ரயில் கடவையை கடப்பதில் குழப்பமடைந்த மாணவி ரயிலில் மோதுண்டுள்ளார்.

படுகாயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்கரியில் பயணிகள் ரயில் சேவை கடந்த 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் ரயிலில் மோதுண்டு 77 மரணங்கள் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.