இலங்கையர்களை கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் கும்பல்!

கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபரொருவர் பணியகத்திற்கு மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இணையத்தில் பதிவிட்டிருந்த அறிவித்தலுக்கு அமைய முகவர் நிலையமொன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தினை செலுத்திய நிலையில் , பின்னர் கனடாவில் தொழில் கிடைக்காமையினால் குறித்த நபர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த முகவர் நிலையத்தின் உரிமையாளரான பெண்ணுக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.