ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த வாழை இலை! குடும்பமே உயிரிழந்த சோகம்?

இந்தியாவில் வாழை இலையில் உணவருந்தியதால் குடும்பமே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் உணவருந்திய வாழை இலையில் வவ்வால்களில் மூலம் பரவிய வைரஸ் கிருமிகள் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இனி வரும் காலங்களில் இப்படி ஒரு சம்பவம் நடக்க கூடாது என்பதற்காகவே இந்த பதிவு. வாழை மரத்தின் பகுதிகள் அனைத்துமே ஏதாவதொரு வகையில் மனிதனுக்கு பயனுள்ளதாக இருக்கின்றன.

வாழை மரத்தின் பயனை நன்கு தெரிந்து கொண்டு அதனை ஆரோக்கியமாக பயன்படுத்த வேண்டும். “வாழையடி வாழையாய் வாழ்வுதனை வாழ்ந்திருப்போம்” என்று நீடூழி வாழ்வதற்கு உதாராணமாய் வாழை மரத்தை எம் மூதாதையர்கள் கூறுவார்கள். புனிதமான இந்த மரத்தின் மையத்தில் உள்ள தண்டு நீளமானதாக இருக்கும். இந்து மத கலாச்சாரத்தின் படி, மக்கள் வாழை இலையில் உணவருந்துவது வழக்கம். திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் என பல்வேறு இடங்களில் பயன்படுத்தும் இலையாக வாழை இலை உள்ளது. வீட்டின் முற்றத்திலும், பின் பகுதியிலும் வாழை மரத்தை நட்டு வளர்ப்பது மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.

வாழை இலை சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவும் உள்ளது. உணவை கட்டி வைக்க வேண்டிய தருணங்களில், ஒரு பிளாஸ்டிக் பேப்பரைப் போலவும் மற்றும் அலுமினிய காகிதம் போலவும் வாழை இலை செயல்படுவதால், உணவு காய்ந்து போவதும், சூடு குறைந்து போவதும் தவிர்க்கப்படுகிறது. ஒரு வாழை இலையை தரையில் விரித்து, அதில் நீங்கள் தட்டு அல்லது விரிப்பில் போடுவதைப் போல உணவைப் பரிமாற முடியும். உணவு கெட்டுப் போகாமல் இருக்கவும், சூடு குறையாமல் இருக்கும் கவசமாகவும் பயன்படுத்தும் வாழை இலை, இயற்கையான முறையில் மக்கும் பொருளாகவும் உள்ளது.

வாழை இலை ஏராளமான நன்மைகளை தரும் ஒரு பொருள். இது பார்ப்பதற்கு பெரிதாக, மடக்க கூடிய தன்மையுடன், நீர் ஒட்டாத தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் தான் தமிழர்கள் விருந்து என்றாலே தழை வாழை இலை போட்டு தான் சாப்பிடுவார்கள். வாழை இலையில் உணவை வைத்து சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லது. அற்புத பயன்கள் எபிகலோகேட்சின் கலேட் (இஜிசிஜி) . க்ரீன் டீ யில் இருப்பதை போன்று இது ஒரு பாலிபினால் ஆகும். வாழை இலையில் கிட்டத்தட்ட 3 பாலிபினால் வளைவுகளும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. வலிமையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வாழை இலையில் வலிமையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சருமம் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. அதே மாதிரி சரும புற்றுநோய், பக்கவாதம், ஆர்டியோஸ்கேலரிஸ், இதயம் செயலிழப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து நம்மை காக்கிறது.

எக்ஸிமா, வெயிலினால் ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றை இந்த வாழை இலை குணமாக்குகிறது. வெயிலினால் சரும பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் வாழை இலையை குளிர்ந்த நீரில் நனைத்து வைக்க வேண்டும். இதே மாதிரி வாழை இலையை உடம்பு முழுவதும் சுற்றி சிகச்சை அளிக்கின்றனர். இதிலுள்ள அலன்டோனின் என்ற கெமிக்கல் பொருள் சரும வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் தான் அழகு சாதன க்ரீம்கள், லோசன்கள் என எல்லாவற்றிலும் வாழை இலையை பயன்படுத்துகிறார்கள். அலன்டோனின் சரும பாதிப்பை வேகமாக சரி செய்து சரும செல்களை குணப்படுத்துகிறது. அதே மாதிரி சரும பாதிப்புக்கு காரணமான பாக்டீரியாவை அழித்து சரும வளர்ச்சியை புதுப்பிக்கிறது. வாழை இலை நிறைய நாடுகளில் உணவை கெட்டி கொடுப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இது உணவை பாதுகாப்பாக வைக்கவும், வாழை இலையின் நறுமணம் உணவோடு கலந்து உணவை கெடாமல் வைத்திருக்கும்.