மீண்டும் அவதாரம் எடுக்கும் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!

பதினான்காவது ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி இந்த வருடம் நவம்பர் மாதம் இறுதியில் இந்தியாவின் புவனேஸ்வரில் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக விஷோட ஹாக்கி ஆந்தம் ஒன்றை ஏஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கின்றார்.

ஜெய் ஹோ, செம்மொழி ஆந்தம் போல் இதுவும் மனதில் நின்று முனுமுனுக்கவைக்க இருக்கின்றதாம். இந்த ஆந்தம் பாடலுக்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைகின்றார் ஏஆர்.ரஹ்மான்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ஷாருக்கான், “இந்தியாவின் பெருமையோடு சில மணி நேரம் செலவழித்தது பெருமையாக உள்ளது என பதிவிட்டுள்ளார்”. குறித்த பதிவை ஏஆர்.ரஹ்மான் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும், ஹாக்கி என்பது என்னுடைய இதயத்தில் ஒலிக்கும் பாடல். நிச்சயம் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க விழா நிகழ்வில் பங்கேற்பேன். நம்மிடம் அணி உள்ளது. ஹாக்கி உலகக் கோப்பையில் நான் இருப்பதை பெருமையாக நினைக்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த ஹாக்கி ஆந்தம் பாடலை ஷாருக்கானை வைத்து ஏஆர்.ரஹ்மான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே லெ மஸ்க் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி படத்தை இயக்கியுள்ளார். இப்போது ஷாருக்கானை இயக்க தயாராகி வருகிறார்.