முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் கோரவிபத்து!

சற்றுமுன்னர் முள்ளியவளை பிரதான வீதியில் இன்று 17-10-2018 பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

hdr

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த முச்சக்கரவாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், காலில் காயமடைந்துள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளும், முச்சக்கரவாகனமும் ஒருபகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

hdr

காயமடைந்தவர்கள் மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்-பட்டுள்ளனர். முச்சக்கரவாகனச் சாரதியின் கவனயீனமே குறித்த சம்பவத்துக்கு காரணமெனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முள்ளியவளை பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

dav
dav